Tuesday, 13 December 2016
ஒரு காத்திருப்பு முடிவுக்கு வருகிறது
இரண்டு ஐந்து மாதக் காத்திருப்பு
முகம் பார்கத் துடித்த பரிதவிப்பு
கெஞ்சல் மட்டும் கொஞ்சலாகிப் போன நொடிகள்
தூரமாகிப் போன இனிமையான நிகழ்வுகள்
தூர தேசம் ஒன்றுதான் காரணமாகிப் போனது
உயிர் எங்கோ உள்ளம் எங்கோ உணர்விழந்து ஊசலாடிய பொழுதுகள்
மனதில் இருந்த ஆசைகள் கண்ணைக்கட்டி சுற்றித் திரிந்த்தாய் உள்ளம் சொன்னது
முகம் பார்த்து சொல்ல ஆயிரம் இருந்தும் முடியாமல் தவித்தது மட்டும் மிஞ்சிப் போனது.
பேச்சு சத்தம் சிரிப்பொலி என்னை சுற்றி வந்த போதும்
நீங்கள் இல்லாத தனிமை எப்போதும் தானாய் அணைத்துக் கொண்டது.
எதிர்பார்ப்புக்கள் எட்டிப் பார்த்தன
ஏமாற்றம் கடந்து போனது
பொறுமை மட்டும் காத்திருப்பதாய் பொய் சொன்னது
அப்போதெல்லாம் கண்ணீர் துணையானது
முந்திப் போன இலங்கை நேரத்தில் நான் விழித்துக் கொண்டேன்
என்னை முந்தி வந்த கண்ணீரில் தலையணை நனைத்தேன்
வேண்டுமென்றே தேதியெல்லாம் மாற்றிக்கொண்டேன்
காத்திருப்பில் மட்டும் சுகம் அதனை கண்டுகொண்டேன்
இனி எல்லாம் முடிந்தது
என்னோடு உயிர் வந்து சேர்ந்தது
அருகாமை மட்டும் சொந்தமானது
அலைபேசி தூரமாகி
அன்பு மட்டும் அருகாமையானது.
Labels:
Poetry
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment