Tuesday, 25 October 2016
ஒரு தலைக் காதல்
அவள் மீது எப்போதும் காதல் தான் எனக்கு
பால் பொழியும் முழு நிலா முகம்
எப்போதும் எதையோ தேடிக்கொண்டு இருக்கும் அவள் கரு விழிகள்
கட்டையாய் வெட்டப்பட்ட கரு முடி அவள் கூந்தல்
அவள் என் உலகின் தேவதை
நான் சிரிக்கையில் சிரிக்கும் மழலைச் சிரிப்பு
கண்டபடி ஓடும் அவள் சிறு பாதங்கள்
வானம் பார்த்துக் கதைக்கும் அவள் மழலைப் பேச்சு
கபடமில்லா அவள் பிஞ்சு மனம்
இவை மீதும் அவள் மீதும் எப்போதும் காதல் எனக்கு
பகிர்ந்து கொள்ள முடியாத கவலைகள் அதனோடு வரும் கண்ணீர்
படியோரம் நான் நிற்கையில் தூரத்தே தெரியும் அவள் அசைவுகளை
இதமாய் என் உள்ளம் சுமந்து கொள்ளும்.
அடிக்கடி வந்து போகும் வீட்டு நினைவுகள்
ஆனபோதும் அவள் தரிசனம் காணும் போதெல்லாம்
தன்னிலை மறந்து அவளை இரசிக்கும் என் கண்கள்.
மீண்டு வர நினைக்கிறேன்
மீண்டும் மீண்டும் முயன்று தோற்கின்றேன்
அவள் வயதில் யாறென்ற போதும் காதல் தான் எனக்கு
ஆனபோதும் பக்கத்துவீட்டுக் மழலை அவள் மீது அளாதிக் காதல் எனக்கு
அயலார் என்றால் அண்டி வாழும் கொழும்பு நகரில்
அவளை தூரத்தே இருந்து இரசிக்கும் இரசிகை நான்.
Labels:
Poetry
Subscribe to:
Post Comments (Atom)
Superb... Heart touching poem...
ReplyDelete