துள்ளித்திரிந்த பள்ளி வாழ்வின் பசுமை நாட்களை என் நினைவுகளால் மீட்டிப்பார்கின்றேன்
துறக்கமுடியாத சுகமான சுமைகள்
நீங்கமல் என் நெஞ்சில் நிலைத்துவிட்டன.
இடைவேளையில் வாங்கும் அவித்த வெரலிக்காய்கும் உப்பு மாங்காய்கும் போராடும் ஏழெட்டுக் கைகள்
இடைவேளைக்குப் பிந்தி வரும் பாடங்களில் முந்தி வரும் தூக்கம்
பழைய பலகை துடுப்பாய் மாற உலக கோப்பையின் போது கூட இல்லாத விருவிருப்பான பத்தே நிமிட கிரிகெட் ஆட்டம்.
கொஞ்சம் வளர்ந்ததும் குடிகொண்ட வெட்கம்.
சிராய்ப்புக்கள் இல்லாத சிறு சண்டைகள் அதனோடு சேர்ந்தே வரும் சமாதான உடன்படிக்கை.
மாலை நேர வகுப்பென்றால் வீட்டில் இருந்து வரும் மீன் துண்டுக்கான முந்தியடிப்பு
மறக்க முடியாத கல்விச்சுற்றுலாக்கள்
அவற்றில் கலந்துகொள்ள முடியாத போது வருகின்ற வேதனை
பாடசாலை முடிந்ததும் தொடங்கி விடும் மேலதிக வகுப்புக்கள்
முடிந்துவிடாத சிரிப்புச் சத்தம் அங்கேயும் தொடங்கி விடும்.
தோழியர் தொலைவில் தெரிந்தனர்
ஞாபகங்கள் மட்டும் மிஞ்சிப் போனது
இறுதி வரை பிரிய மாட்டோம் என்ற சபதம் மட்டும்
எங்கோ தொலைந்து போய் விட்டது.
காற்றோடு கலந்து வந்த திருமணச் செய்திகள்
நெருக்கமான தோழியர் திருமணத்தில் சந்திப்புக்கள்
அதில் இடம்பெறும் சில நொடிச் சுகம் விசாரிப்புக்கள்
சமூக வளைத்தளங்களில் முறிந்திடாத தொடர்பு
ஆனால் தொலைந்து போன தொடர்பாடல்
இதுதான் தோழிமார் கதை
இறுதி வரை பிறந்த ஊரில் வாழும் பாக்கியம்
நினைத்த நொடியில் நண்பனை காணும் சந்தர்ப்பம்
பொதுப்பரீட்ச்சை முடிந்ததும் தொடங்கிடும் அவர்களின் முடிவில்லாப் பிரயாணம்
ஐந்து நேரத் தொழுகையின் பின்னர் ஐந்து வீடு தள்ளியிருக்கும் நண்பனின் சந்திப்பு
சுத்தமான காற்றை சுவாசித்தவாரே ஒரு மிதி வண்டிப் பயணம்!
விடுமுறை நாட்களில் மலையேறும் அனுபவம்
என்றும் மாறாத தூய நட்பு
உண்மையில் அவர்கள் பாக்கியசாலிகள் தான்!