Friday, 26 August 2016

கிணற்றடியில் இருந்து.....  

         


இதோ கிணற்றடியில் இருந்து என் காதல் கடிதம் இல்லை இல்லை காதல் கவிதை....

பெருநாள் தினம் தனில் ஒருநாள் உம்மாவோடு கைகோர்த்துச்சென்று பயமாய் நான் கிணற்றடியில் உட்கார்ந்து இருக்கையில் உம்மும்மா தலைக்குத் தண்ணீர் ஊற்றியது மங்கலாய் ஞாபகம் இருக்கிறது
மீண்டும் ஒரு நாள் இரு தசாப்த்தம் கழித்து நேற்று அதே கிணற்றோரம் நான் செல்லுகையில் என்னை வாரி அணைத்துக்கொண்டது..

கைப்பேசி வேண்டாம்
முகநூல் வேண்டாம்
இன்ஸ்டாவும் வேண்டாம்
எனக்கு அந்த கிணற்றடி மட்டும் போதும்
ஆயிரம் கதைகள் பேசலாம்
ஒராயிரம் கவி வரிகள் வரையலாம்.

கோடை வாடை சென்று மழையின் மண் வாசனை என்னைக் கொஞ்சம் உயிர்ப்பித்தது.
சுற்றிப்படர்ந்த வல்லாரையும் அந்த வட்டக்காய்க் கொடியும் இன்னும் பல பூச்செடிகளும் என்னைப்பார்த்து புன்னகைத்தன.
கிணற்றடியின் தென்றல் சிதறித் தெறிக்கையில்
ஓராயிரம் கவி வரிகள் என்னை அணைத்துக் கொண்டன.

முத்துக்கு முத்தான தண்ணீர் என் தலையை தடவுகையில் உலகின் அனைத்துச் சுகமும் தோற்றுப் போனது.
சில்லென வீசும் காற்று, குளிரெடுக்கும் தேகம்.
சலசலக்கும் இலை,சப்தமில்லா மாலைப் பொழுது,
மழைச்சாரல்,மண் வாசனை
இந்தக்கிணற்றடி உலகின் சுவர்க்கம் தான்.

ஆயிரம் வேலைப்பாடு அலங்கரித்த குளியலறையில் குளித்திட்ட போதும்,
கிணற்றடியின் அந்தி நேர மெளனம் தந்திட்ட சுகம் கிடைத்ததிடுமா??
வாளியில் தண்ணீர் அள்ளுகையில் கேட்டிட்ட சப்தத்தை சிறந்த இசை கேட்டிட முடியுமா?
வரும் தலைமுறைக்கு கிணற்றின் வாசம் கூட காணக்கிடைத்திடாது.
தலைமுறை என்ற சொல்மட்டுமே மிஞ்சிப்போகும்.

கடைசியாக அந்தக் கிணற்றடியில் இருந்து எழுந்து வருகையில் கிணற்றின் மீது கொண்ட காதல் மட்டும் மிஞ்சிப் போனது!!

3 comments:

  1. Ha ha ha...nice lines..this lines remembering one of my incident..

    ReplyDelete
  2. Ha ha ha...nice lines..this lines remembering one of my incident..

    ReplyDelete